.
.

.

Latest Update

இந்த ஆண்டின் மகத்தான தருணம் இது! பள்ளி சுதந்திரதின விழாவில் விஷால் பெருமிதம்


இந்த ஆண்டின் மகத்தான தருணம் இது என்று ஒரு பள்ளி சுதந்திரதின விழாவில் கலந்து கொண்ட விஷால் பெருமையுடன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு

Actor Vishal Hosts National Flag For  Independents Day (17)இன்று சென்னை ஷெனாய்நகர் திருவி.க மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.இவ் விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களிடம் விஷால் பேசும் போது

” சுதந்திரத்துக்காக போராடியவர்கள் உயிர் இழந்தவர்கள் பற்றியெல்லாம் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் . சுதந்திரம் சாதாரணமாக வந்து விடவில்லை.

இன்று உங்களால் எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒருபள்ளி சுதந்திரதின விழாவில் கலந்து கொள்வேன் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

உங்கள் மூலம் எனக்கு அந்த பாக்யம் கிடைத்து இருக்கிறது.

இங்கே இந்திய ராணுவத்திலிருந்த திரு மித்ரதாஸ் அவர்கள் வந்து இருக்கிறார்கள். நாங்களெல்லாம் வாழ்க்கையில் ‘ரீல் ஹீரோஸ்’ இவர்தான் ரியல் ஹீரோ .உங்கள் மூலம் இப்படிப்பட்ட ரியல் ஹீரோவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

Actor Vishal Hosts National Flag For  Independents Day (11)இங்குள்ளவர்களிடையே அவரைத்தான் இளைஞராக உணர்கிறேன். அவரது வயதை எண்ணி உட்கார்ந்து மாலை மரியாதையை ஏற்கச் சொன்னபோது ,முடியாது என்று மறுத்து நின்றுகொண்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதில் இந்திய ராணுவத்தின் உறுதி தெரிந்தது. அந்த ராணுவத்தின் உறுதியான கம்பீரம் என்றும் ஒயாது . நான் திரு மித்ரதாஸ் அவர்களை அவர் கையைப் பிடித்து அழைத்து வந்து தேசியக்கொடியை அவர் கையால் ஏற்றிய போது மிகவும் மகிழ்ந்தேன்.அப்போது அதை என் இந்த 2015ஆண்டின் மறக்க முடியாத தருணமாக உணர்ந்தேன்.

இந்நாளில் நான் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். மேலே படிக்க வசதி இல்லாமல், நிதியில்லாமல் தவிக்கிற மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ விரும்புகிறேன்.

ஒரே ஒரு காரணத்துக்காகவே உதவ விரும்புகிறேன்.

நீங்கள் பள்ளியை விட்டுச் சமுதாயத்தை நோக்கி வெளியே செல்லும் போது, ஏதாவது சமுதாயத்துக்கு முடிந்த அளவு உதவவேண்டும் இந்த எதிர்பார்ப்புடன்தான் பெற்றோரும் ஆசிரியர்களும் வெளியே நிற்கிறார்கள். எவ்வளவு உதவவேண்டும் என்பதை விட ஏதாவது உதவி செய்யவேண்டும் என்கிற உணர்வு வேண்டும். இதை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஏனென்றால் மற்றவர்களுக்கு உதவுவதைப் போல சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.

Actor Vishal Hosts National Flag For  Independents Day (10)என் பையன் நல்லாபடிச்சு வருவான் என்கிற நம்பிக்கையோடு உங்களைப் பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்குப் போகிற உங்கள் பெற்றோரை ஏமாற்றிவிட வேண்டாம். பெற்றோரின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.

பெற்றோரை மதியுங்கள். நன்றாக இருக்கலாம். நான் பெற்றோரை மதித்தேன் ; இன்று நன்றாக இருக்கிறேன். பள்ளியில் கலைநிகழ்ச்சிகள். விளையாட்டுப்போட்டிகளில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள். அது என்றைக்காவது கைகொடுக்கும். அதன் அருமை போகப்போகத்தான் புரியும். என்.சி.சி, என். எஸ்.எஸ்.போன்றவற்றில் சரியாகப் பங்கேற்காத வருத்தம் எனக்கு இருக்கிறது.
எனவே கலைநிகழ்ச்சிகள்,போட்டிகளில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள்
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். ” இவ்வாறு விஷால் பேசினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles