.
.

.

Latest Update

இயக்குனர் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’


இயக்குனர் ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு இருக்கும். Uppu Karuvadu Movie Stills (2)அவரது படத்தில் வரும் பாடல்கள் வருடங்கள் கடந்தும் நினைவில் இருக்கும். இவரது இயக்கத்தில் தற்போது வெளி வர தயாராக இருக்கும் ‘உப்பு கருவாடு’ படத்தின் பாடல்களும் வெகுவாக எல்லோரையும் கவரும் எனக் கூறப்படுகிறது.சமீபத்தில் ஜோதிகா வெளியிட்ட இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பட நிறுவனத்தினர் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளனர். கருணாகரன், நந்திதா ஆகியோருடன் எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி, குமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் டாடி என்னக்கு ஒரு டவுட் செந்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி , மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்து உள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை SONY நிறுவனத்தார் பெற்று உள்ளனர். ‘படத்தின் பாடல்களுக்கு நிச்சயம் பெரும் வரவேற்ப்பு இருக்கும்.விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது, அதை அடுத்து படம் ரிலீஸ் என பணிகளில் ஈடுப்பட்டு வருகிறோம். திரை உலகில் இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பு நிச்சயம் படத்தின் வெற்றியில் பிரதிபலிக்கும் எனக் கூறினார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )