.
.

.

Latest Update

உயிர் காக்கும் சேவையில் “விருத்தாசலம்“ பட நாயகன்


லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படத்திற்கு “ விருத்தாசலம் “ என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர்.கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா, டைரக்டர் நாராயணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு – உமாசங்கர் – சிவநேசன் / இசை – ஸ்ரீராம் பாடல்கள் – இளையகம்பன் / எடிட்டிங் – வி.டி.விஜயன் – சுனில் கலை – நா.கருப்பையன் / நடனம் – சதீஷ் / சண்டை – பயர் கார்த்திக் தயாரிப்பு மேற்பார்வை – கே.எஸ்.மயில்வாகனம் / தயாரிப்பு நிர்வாகம் – முருகதாஸ் தயாரிப்பு -பி.செந்தில்முருகன்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரத்தன்கணபதி.படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… கிராமத்தில் குடித்துவிட்டு தன் போக்கில் சுற்றி திரியும் விருதகிரி. தனது வாழ்கையில் எதையோ இழந்து விட்டு எதையோ தேடுவது மாதிரியான வாழ்க்கை. அவரது, அப்படிப்பட்டவரின் நிகழ்கால வாழ்கையை ஒரு பெண் எப்படி புரட்டி போடுகிறாள் என்பது கதை முடுச்சு.என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் மாதிரியான கிராமத்து யதார்த்த மனிதர்களை இதில் பிரதிபலித்திருக்கிறோம். இந்த கதாப்பாத்திரத்திற்கு விருதகிரி நூறு சதவீதம் பொருந்தி போய் விட்டார்.
நிஜ வாழ்வில் விருதகிரி சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர். அவர் இருக்கும் வித்தாசலம் பகுதியில் உள்ள கச்சிராய நத்தம் என்ற ஊரில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைபட்டால் அவர்களை தனது சொந்த காரில் அழைத்து வந்து சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார். உயிருக்கு போராடிய எத்தனையோ பேரை காப்பாற்றி உள்ளார்.தனது சொந்த வேலைகளைக் கூட பெரிதாக நினைக்காமல் மற்றவர்களின் உயிர் காப்பாளனாக சேவை செய்கிறார். வாழுகிற வரைக்கும் நம்மால் முடிந்தவரை மற்றவர்களை வாழ வைத்து பார்ப்போமே என்று சொல்கிறார். அவரது பெருந்தன்மை என்னை மட்டுமல்ல எங்கள் யூனிட்டையே பெருமைப்படுத்தி விட்டது என்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles