.
.

.

Latest Update

உலக சினிமாவை வியக்க வைக்க போகும் “பாகுபலி”


Bahubli_6 sheet_1எப்போதும் ஒரு சில படங்கள் வரும்போது இந்த படம் உலக சினிமாவுக்கு சவால் விடும் என்று சொல்வார்கள் ஆமாம் இப்படி பல தமிழ் மட்டும் இல்ல பிற மொழி படங்களுக்கும் நாம் சொல்லி இருக்கோம் ஆனால் இப்போது நாம் மார் தட்டி கொள்ளலாம் ஆம் உலக சினிமாவை திரும்ப பார்க்க போற படம் “பாகுபலி”.

இதுவரை ஆங்கில படங்களை உதாரணம் காண்பித்த நாம் இனி ஆங்கில படம் எடுப்போர் பாகுபலி போல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அந்த அளவுக்கு இந்த படத்தின் முன்னோட்டம் நம்மளை பிரம்மிக்க வைத்து உள்ளது
உழைப்பு வீண் போகாது என்பார்கள் அது உண்மை.

ஆமாம் ஒரு படம் எடுக்க மூன்று ஆண்டு காலம் அதுவும் ஒரு நாள் படபிடிப்பில் 3000 பேருக்கும் மேல் இப் படத்தில் வேலை புரிந்து உள்ளனர் இப்படி 320 நாள் படப்பிடிப்பு நடை பெற்று உள்ளது இதில் சண்டை காட்சிகள் மட்டும் 120 நாட்கள் எடுத்து உள்ளனர் அதில் 2000 பாடி பில்டர்ஸ் பட பிடிப்பில் இருந்தனராம். கேட்கும்போது பிரமிப்பு அப்போ படம் எடுக்க இந்த குழுவினர் எவ்வளவு சிரமம் அப்படி சிரமம் பட்டு இப் படத்தை எடுத்து உள்ளார் இயக்குனர் ராஜா மௌலி அதன் பிரதிபலிப்புகள் படத்தின் முன்னோட்டத்தில் தெறிகுறது. இப் படம் தமிழ் மற்றும் தெலுகு நேரடி படம்.

இப் படத்தின் முன்னோட்டம் வெளியீடு விழா இன்று நடந்தது.

படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

பாகுபலி படத்தில் நடித்தவர்கள் யார் தெலுகு உச்சகட்ட நடிகர் நம்ம ஊர் அஜித் போல அங்க பிரபாஸ் தான் நாயகன் வில்லனாக ராணா. சத்யராஜ், நாசர், கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் நாயகியாக தமன்னா, அனுஷ்கா.ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிச்சி இருக்காங்க. படத்தின் ஒளிபதிவாளர் செந்தில்குமார், கதை விஜயேந்திர பிரசாத் இசை மரகதமணி படத்தின் மிக முக்கிய பலம் கலை இயக்குனர் சாபு சிரில், சண்டைபயற்சி பீட்டர் ஹெயின்,வசனம் மதன் கார்கி தயாரிப்பு ARKA தமிழில் வெளியிடும் உரிமையை நம்ம ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா பெற்று உள்ளார்

உலக இந்தியர்களின் அடையாளம் தான் இந்த பாகுபலி

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles