.
.

.

Latest Update

‘ஒப்புதல்’ – அனைவராலும் ஏற்றுக்கொள்ள பட வேண்டிய ஒன்று… என்ற வலுவான கருத்தை டாப்சி பண்ணுவோடு இணைந்து சொல்லி இருக்கிறது ‘புட் சட்னி’


Watch the video on- https://www.youtube.com/watch?v=WhL-67t4y8I

‘ஒப்புதல்’ – அனைவராலும் ஏற்றுக்கொள்ள பட வேண்டிய ஒன்று… என்ற வலுவான கருத்தை டாப்சி பண்ணுவோடு இணைந்து சொல்லி இருக்கிறது ‘புட் சட்னி’

காதலை சொல்லும் உரிமை ஆண்களுக்கு இருக்கும் பொழுது, அந்த காதலை மறுக்கும் உரிமை பெண்களுக்கும் சமமாக இருக்கின்றது… என்கின்ற கருத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் பாடல் தான் ‘தி எஸ் நோ சாங்’. சமீபத்தில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த டாப்சி பண்ணு, அங்கத் பேடி ஆகியோருடன் இணைந்து, கல்ச்சர் மிஷினின் டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’ இந்த ‘தி எஸ் நோ சாங்’ பாடலை உருவாக்கி இருக்கிறது. காதலில் பெண்களின் ஒப்புதல் மிக அவசியம்… இருக்கு என்றால் இருக்கு…இல்லை என்றால் இல்லை….இதை நன்கு புரிந்து கொண்டால் எல்லாம் சுகமே…. இது தான் ‘தி எஸ் நோ சாங்’ பாடலின் சிறப்பு. முரட்டு தனமாக காதலை வெளிப்படுத்தினால், பெண்களின் மனதை எளிதாக வென்றுவிடலாம் என்ற தவறான போர்வையில் நம் சமூதாயம் இருக்கின்றது என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றது இந்த பாடல்.

பிரபல தமிழ் திரைப்பட பாடலான ‘கம்னா கம், கம்னாட்டி கோ’ என்ற பாடலின் இசையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது ‘தி எஸ் நோ சாங்’. நினைத்தவுடன் வாங்குவதற்கு பெண்கள் மனது ஒன்றும் பரிசு பொருள் இல்லை…விடாமல் பின் தொடருவதாலோ, அச்சுறுத்துவதாலோ, பெண்களின் மனதில் காதல் மலர்ந்துவிடாது என்பதை இந்த பாடல் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் டாப்சி பண்ணு…. ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஒரு கருத்தை இந்த பாடல் மூலம் சொல்லி இருக்கிறார் டாப்சி… “பிடிச்த்திருந்தா பிடிச்சிருக்குனு சொல்லு….யாருக்கும் பயப்பட தேவையில்லை…. ஆனால் ஒருத்தனை பிடிச்சிருந்து, சமுதாயத்திற்கு பயந்து அவனை பிடிக்கவில்லை என்று கூறி அவனை குழுப்பாதீர்கள்…” என்பது தான் அந்த கருத்து.

“முடியாது… என்ற பதிலை ஆண்கள் எப்படி கடினமாக உணருவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். நட்சத்திரங்களின் வாழ்க்கையில் இது போல பல சம்பவங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனை நட்சத்திரங்களுக்கு மட்டுமில்லை, ஒவ்வொரு சராசரி பெண்களுக்கும் இருக்கின்றது. பேஸ்புக்கில் ஆரம்பித்து, ஆசிட் வீச்சு, ஏன் கொலையில் கூட இந்த பிரச்சினை போய் முடியும். இந்த பிரச்னையை பற்றி மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்….’ என்று கூறுகிறார் டாப்சி பண்ணு.

“தென் இந்திய மக்களுக்கு மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் பொதுவானதாக இருக்கும் என்று நான் உணருகிறேன். காதலில் பெண்களின் ஒப்புதல் மிக முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்…’ என்று கூறுகிறார் அங்கத் பேடி

மொத்தத்தில், ஒப்புதல் இல்லாத காதல் என்றுமே ஜெயிப்பதில்லை என்ற கருத்தை நம் அனைவருக்கும் வலியுறுத்தி இருக்கிறது ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும் ‘தி எஸ் நோ சாங்’.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles