.
.

.

Latest Update

ஒரு படத்துக்கு கதைதான் கதாநாயகன்! இயக்குநர் பி.வாசு பேச்சு – அசுரகுலம் இசை வெளியீட்டு விழா.


ஒரு படத்துக்கு கதைதான் கதாநாயகன். என்று ஒரு பட விழாவில் இயக்குநர் பி.வாசு பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு!

Asura Kulam Audio Launch Stills (19)பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் ‘பெப்ஸி’ யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘அசுரகுலம்’. பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனின். பேரன் விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆப்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

ட்ரெய்லரை பிரபு வெளியிட்டார். பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் பி.வாசு பேசும்போது ” விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக ,ஒரு பலசாலியாகத்தான் தெரியும். இன்று இங்கே அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன். ஒருஅப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்றுதான் .மகன் நன்றாக வரவேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது.

இந்தப் படக்குழு நாளை சாதனையாளர்களாக மாறி இதுமாதிரி மேடையில் அமரவேண்டும்.வாழ்த்துக்கள். சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது.

இன்று ஒரு படத்துக்கு கதாநாயகன் யார் என்றால் அது கதைதான் . படம்தான் நட்சத்திரம். உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான்கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.
கதாநாயக நடிகர்களுககு பெரிய பெரிய கட்அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும்.அதற்கு அழகு படுத்தி மாலை எல்லாம் போடுவார்கள்.பாலாபிஷேகம் செய்வார்கள். அந்தக் கட்அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும் ; நிறைய ஆணிகள் இருக்கும்; கயிறுகள் இருக்கும்.

அவர்கள்தான் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் அதை மறந்து விடக் கூடாது” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles