.
.

.

Latest Update

“ஒரே ஒரு விபத்து என் பெயரை மாற்றி விட்டது .” என்கிறார் ‘மியாவ்’ படத்தின் கதாநாயகி ஊர்மிளா காயத்ரி.


“ஒரே ஒரு விபத்து என் பெயரை மாற்றி விட்டது …” என்கிறார் ‘மியாவ்’ படத்தின் கதாநாயகி ஊர்மிளா காயத்ரி

பொதுவாகவே செல்ல பிராணிகளான நாய்களுக்கும், பூனைகளுக்கும் ஒரு மிக பெரிய வித்தியாசம் உண்டு. “நமக்கு உணவளிக்கிறார்கள், இவர்கள் தான் நம் தெய்வம்…’ என்று நினைப்பது நாயின் குணம்…”நமக்கு வேண்டியதெல்லாம் இவர்கள் செய்கிறார்கள், எனவே நாம் தான் இவர்களுக்கு தெய்வம்…” என்று நினைப்பது பூனையின் குணம். செல்ல பிராணிகள் வளர்க்கும் பலர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். அப்படி பெருமையை தனது மகுடமாக சூடி கொள்ளும் பூனையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மியாவ். ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி இயக்கி இருக்கும் இந்த ‘மியாவ்’ திரைப்படமானது, 2016 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இருக்கக்கூடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், குடும்பங்கள் என எல்லா தரப்பு ரசிகர்களின் ஆர்வத்தையும் உயர்த்தி கொண்டே போகும் மியாவ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் ஊர்மிளா காயத்ரி.

“மியாவ்’ ஒரு முழு நீள அனிமேஷன் படம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ‘பெர்சியன் கேட்’ எனப்படும் ஒரு உயர்ரக நிஜ பூனையாது இந்த படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறது. ‘மியாவ்’ படத்தில் நான் ஒரு தைரியமான விளம்பர மாடலாக நடிக்க, அந்த கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு தான் மியாவ் கதையானது நகரும். ‘மியாவ்’ படத்தின் இரண்டு பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவதாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு களத்தில் எனக்கு நடந்த ஒரு சிறிய விபத்தால் அந்த பாடல்களுக்கு என்னால் நடனம் ஆட முடியவில்லை. இன்னும் சொல்ல போனால் அந்த விபத்தானது என்னுடைய பெயரையே மாற்றிவிட்டது…பின்னி மில்ஸில் அந்த பாடல்களின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி நான் கீழே விழ, என்னுடைய முழங்கையும், முழங்கால் முட்டியும் இடம்பெயர்ந்து விட்டது. அந்த விபத்து வரை காயத்ரி என்ற பெயரோடு இருந்த நான், அதற்கு பின் ஊர்மிளா காயத்ரி என்று மாற்றி கொண்டேன். நிச்சயமாக இந்த பெயர் என்னுடயை வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்…பொதுவாகவே பூனைக்கு ஒன்பது உயிர் உண்டு என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம், அதே போல் எனக்கும் ஒன்பது உயிர்கள்…அதில் முதல் உயிரை இந்த மியாவ் படத்தின் மூலம் நான் பெற்று இருக்கிறேன்….

புதுபுது கதை களங்கள் கொண்ட பல திரைப்படங்களுக்கு பிறப்பிடமாக திகழ்வது தமிழ் சினிமா. எனவே தான் தமிழ் ரசிகர்களை அவ்வளவு எளிதில் ஈர்க்க முடியவில்லை. ஆனால் முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு தரமான திரைப்படமாக உருவாகி இருக்கும் எங்களது மியாவ் படமானது நிச்சயமாக தமிழக ரசிகரகளின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். மதில் மேல் இருக்கும் மியாவ் (பூனை), கண்டிப்பாக வெற்றி எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் குதிக்கும் என முழுமையாக நம்புகிறோம்…’ என நம்பிக்கையுடன் கூறுகிறார் மியாவ் படத்தின் கதாநாயகி ஊர்மிளா காயத்ரி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles