.
.

.

Latest Update

‘காமராஜ்’ திரைப்படத்தில் நடித்துள்ள காந்தியவாதி சசி பெருமாள்


‘காமராஜ்’ திரைப்படத்தில் காமராஜரின் உதவியாளர் வைரவன் வேடத்தில் நடித்துள்ள காந்தியவாதி சசி பெருமாள் ‘காமராஜ்’ Sasi perumal (1)திரைப்பட இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் அஞ்சலி. 2004ல் ‘காமராஜ்’ திரைப்படம் வெளியான பின்பு பெருந்தலைவரைப் பற்றி நெகிழச்செய்யும் பல தகவல்கள் எங்களை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. அவைகளை ‘காமராஜ்’ திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கும் போது இணைக்க திட்டமிட்டிருந்தோம். அவைகளில் முக்கியமானது பெருந்தலைவர் காமராஜர் இறந்தபின்பு அவரது சொத்துமதிப்பை கணக்கிட்டு ரூ110 மற்றும் சில வேட்டி சட்டைகள், அவர் பரம ஏழையாக வாழ்ந்துள்ளார் என்பது வரலாறு.இக்காட்சியில் சொத்து மதிப்பை கணக்கிடும் அதிகாரியாக சமுத்திரகனி நடித்தார். பெருந்தலைவரின் உதவியாளராக 25 ஆண்டுகள் இருந்த திரு. வைரவன் வேடத்தில் நடிக்க பொருத்தமான, மனிதரை தேடினோம். ஏனென்றால் எங்களிடம் பழகிய திரு.வைரவன் அவர்கள் பெருந்தலைவரின் நிழலில் வாழ்ந்து ஒரு தேசத் தொண்டராக, யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்காதவராக இருந்தார்.அத்தகைய மனிதருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக திரு.சசிபெருமாள் திரு.வைரவன் ஆக நடித்தார். அவரை அணுகியதும் எந்த தயக்கமும் இன்றி, தனக்கு கிடைத்த பாக்கியமாக நடித்துக் கொடுத்தார். அவர் தோன்றியுள்ள ஒரே திரைப்படமும் இது தான்.அவரது திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது புனிதமான நோக்கம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. எனது மனமார்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles