.
.

.

Latest Update

“காவல்” என்று பெயர் மாறிய “நீயெல்லாம்நல்லாவருவடா”


சில மாதங்களுக்கு முன்பு திரை நட்சத்திரங்கள் படைசூழ “நீயெல்லாம் நல்லா வருவடா” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிடு நடைப்பெற்றது.
படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னனி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் முன்னனி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஏனெனில் தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற டீசர் இதற்கு முன்பு வந்ததில்லை என்பதால் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்று வந்த படபடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதும், படத்தின் முக்கிய பணிகள் விரைந்து நடைபெற்றன.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்கள், உயர்நிலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் IAS, IRS போன்ற மற்ற துறைகளில் இருக்கும் பிரபலங்களை அழைத்து சிறப்பு காட்சி ஒன்றுக்குஏற்பாடுசெய்திருந்தது தயாரிப்புதரப்பு. படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள்,உயர்காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறதுறை அதிகாரிகள் இயக்குனரையும், தொழில்நுட்பகலைஞர்களையும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும், வெகுவாகபாராட்டி, இப்படம் அனைவரையும் கவரும் என்று வாழ்த்துக்கூறினார்கள்.
படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் இன்னும் ஏதுவான தலைப்பை வைத்தால் நன்றாக இருக்கும் என்று திரைபிரபலங்கள் ஆலோசனை கூறவே, நீண்ட கலந்தாய்வுக்கு பிறகு படத்தின் தலைப்பை “காவல்” என்று மாற்றினார்கள்.
மேலும் படத்தின் இயக்குனர் நாகேந்திரனை வெகுவாகபாராட்டி “நீயெல்லாம்நல்லாவருவடா” என்றுசெல்லமாகவாழ்த்தினார்கள், படத்தை பார்த்து பிரபலஇயக்குனர்களும், உயர்காவல்துறைஅதிகாரிகளும்.
இவர்களின் வாழ்த்து பலித்தது போலவே, முதல் படம் வெளியாகும் முன்னரே, மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் பெரியநடிகர்கள் இருவர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார் நாகேந்திரன்.
இப்படத்தில்விமல், சமுத்திரகனி, கீதா, தேவா, பார்பிஹண்டா, MS பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

SG Films Pvt Ltd தயாரித்துள்ளஇப்படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – N K ஏகாம்பரம். பாடல்கள் நாமுத்துக்குமார், சினேகன், லலித்ஆனந்த், புரட்சிகனல்ஆகியோர்எழுதியுள்ளனர். படத்தொகுப்பைபிரவீன் K L மேற்கொள்கிறார்.

மற்றபடதொழில்நுட்பகலைஞர்கள்விவரம்:

Background Music – Tharan Kumar
Art Director – Videsh
Stunt Master – Silva
Costumer – Rangasamy
Costume Designer – Sangeetha
C.G –Gemini Lab
Stills – Manohar
Choreography – Rajusundaram, Kalyan, Dinesh and Bobby
PRO – Nikkil
DI – B2H
Designs – KreativeKKonect

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles