.
.

.

Latest Update

“கோம்பே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..


“கோம்பே”

தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது தான் இந்தப் படத்தின் அடி நாதம்.

தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான் “கோம்பே”

காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம்.

முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஹிரோவாக “சார்லஸ்” ஹிரோயினாக “தீர்த்தா” நடித்திருக்கிறாரகள்.

கதை ,ஒளிப்பதிவு ,DI, எடிட்டிங், ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் “ஹாபிஸ்இஸ்மாயில்” மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடித்து கல்க்கியிருக்கிறார்.

சினிமாவில் அனைத்து வேலைகளை செய்யும் மலையாளத்தில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியிருக்கிறார், மலையாளத்தில் படம் செய்திருந்தாலும் தமிழ் படத்தின் மேல் உள்ள மோகத்தில் தமிழ் பட உலகில் நுழைந்துள்ளார்.

தமிழுக்கு புதிய இயக்குனரான இவர் தன் தெளிவான பார்வையுடன் மிகுந்த பொருட்செலவில் அனைவரும் வியக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஷீட்டிங்க் நடத்தியுள்ளார்கள். தமிழ் மொழி முழுதாய் தெரியாமலே தன் உதவி இயக்குனர்களின் உதவியில் இந்தப்படத்தை கஷ்டப்பட்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.

புதுமுகம் “அனூப் ராக்வெல்” “அபிஜித் ஜான்சன்: “டென்னிஸ்ஜோசப்” ஆகிய மூவரும் இந்தப்படத்தில் இசையமைத்திருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர் முன்னனியில் இசை வெளியீட்டை நடத்தியது படக்குழு அப்பொழுது பேசிய இயக்குனர். தமிழ் தெரியாமல் தான் தத்தளித்த கதைகளை சுவைபட பகிர்ந்து கொண்டார்.

மிக உயிர்ப்பானதாகவும் உண்மையாகவும் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தன் தம்பி “ஹரிஸ் இஸ்மாயில்” மற்றும் “பினு ஆப்ரகாமுடன்” இணைந்து இப்ப்டத்தை தயாரித்திருக்கிறார் “ஹாபிஸ் இஸ்மாயில்”

படத்தின் கதை 4 நாட்களில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய பட்ஜெட் படம் மிகுந்த உழைப்புடன் உருவாக்கியிருக்கிறோம் பத்திரிக்கையாளர் அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது படக்குழு.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles