.
.

.

Latest Update

சிங்கப்பூர் விழாவில் ”கபிலன் வைரமுத்து” பேச்சு


134”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்” என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார். “கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது” என்றும் தன் உரையை நிறைவு செய்தார். கபிலனைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். விழாவில் குழந்தைகளும் இளைஞர்களும் மேடை ஏறி கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்கள். விழா நடந்த ஐந்து மணி நேரமும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கபிலன்வைரமுத்து முத்தையா இருவர்க்கும் எழுத்தாளர் கழகம் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி சிறப்பித்தது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles