.
.

.

Latest Update

சுசீந்திரன் இயக்கத்தில் அஜித்


pizap.com14344428047001என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், சூரி, கபீர் கான் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. முதலில் விஷ்ணுவர்தன் இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது அஜித்தின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இருவரும் சந்தித்து பேசியிருப்பதாகவும், இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இச்செய்தி குறித்து வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விசாரித்த போது, “இச்செய்தியில் உண்மையில்லை. ஆனால், தற்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை” என்று தெரிவித்தார்கள்.

ஆனால், தமிழ் திரையுலக வட்டாரத்தில் விசாரித்த போது “இப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது தான் தொடங்கி இருக்கிறது. ஆகையால் மறுப்பு தெரிவிக்கிறார்கள். இப்படம் ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம்” என்றார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )