.
.

.

Latest Update

சென்டிமென்ட், காதல் நிறைந்த பேய் படம் – உனக்கென்ன வேணும் சொல்லு


‘உனக்கென்ன வேணும் சொல்லு’ டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து Romatic song  (1)வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , சென்டிமென்ட் கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை விவரிக்கிறார். ‘கார்த்திக்கும் ஜூடியும் தற்செயலாக வரும் ஒரு தொலை பேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள். ஒரு பெண்ணின் சகவாசதுக்காக ஏங்கும் கார்த்திக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜுடியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் 28 வயது ஆகும் ஜூடியின் வெளிப்படையான பேச்சும்,அழகும், அவளது 8 வயது மகள் டைசியின் மேல் அவள் கொண்டு உள்ள பாசமும் கண்டு மயங்குகிறான். அந்தத் தருணத்தில் ,ஜுடியிடம் அவன் மனம் கொண்டக் காதலை விவரிக்கும் இடம் தான் இந்தப் பாடல். மணமாகாத ஒரு ஆணுக்கும் , மனமும் மணமும் உடைந்த ஒருப் பெண்ணுக்குள் ஏற்படும் நிகழ்வுகளே இந்தப் பாடல்.. இந்தப் பாடலை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் விபரீதமான மாற்றங்கள் தான் ‘உனக்கென்ன வேணும் சொல்லு ‘ என்று விவரிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles