.
.

.

Latest Update

‘டார்லிங்-2’ படத்தின் நாயகனான ரமீஸ்ராஜா மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் ‘விதி மதி உல்டா..


‘டார்லிங்-2’ படத்தின் நாயகனான ரமீஸ்ராஜா மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் ‘விதி மதி உல்டா’. இந்தப் படத்தை ரைட்ஸ் மீடியா வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹீரோ ரமீஸ்ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜியும், கருணாகரனும் நடித்துள்ளனர். மேலும் சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின், பாடல்கள் – கபிலன், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷ்யாம், கலை – மைக்கேல் சேகர், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.செல்லத்துரை, கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – விஜய் பாலாஜி.

மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் விதி என்னும் அமைப்புக்குட்பட்டதேயாகும். விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு மட்டுமே உண்டு. இந்த மதியே திடீரென்று உல்டாவாகிவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. காதல், காமெடி, பேண்டஸி கலந்து திரில்லிங் படமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ‘தாறுமாறா ஒரு பார்வை பார்க்க.. நேர்மாறா என்னை அடிச்சு தூக்க’ என்று துவங்கும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியில் ரமீஸ் ராஜாவும், ஜனனி ஐயரும் பாடி, ஆடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சி பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

கானா பாலா, அந்தோணி தாஸ் இணைந்து பாடிய ‘நான்தான்டா பாஸ்.. நீதான் என் பாஸ்..’ என்கிற குத்துப் பாடலுக்கு ரமீஸ் ராஜா, டேனியல் பாலாஜி, சென்றாயன், கருணாகரன் ஆகியோர் இணைந்து ஆடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles