.
.

.

Latest Update

தனியார் கல்வி நிறுவனங்களின் அட்டூழியத்தை சொல்ல வருகிறான் ‘எய்தவன்’…!


Friends Festival Films நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘எய்தவன்’.

இந்தப் படத்தில் கலையரசன் ஹீரோவாகவும், ‘சைத்தான்’ நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், வினோத், சரித்திரன், கெளதம், செளம்யா, ராதா, ரேவதியம்மா, லட்சுமி, சாண்ட்ரா எமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – எஸ்.சுதாகரன், எழுத்து, இயக்கம் – சக்தி ராஜசேகரன், ஒளிப்பதிவு – சி.பிரேம்குமார், இசை – பார்த்தவ் பார்கோ, படத் தொகுப்பு – ஐ.ஜெ.அலென், கலை இயக்கம் – எம்.லட்சுமிதேவ், பாடல்கள் – நா.முத்துக்குமார், கானா வினோத், சண்டை பயிற்சி – ராக் பிரபு. நடனம் – தினா, பாபி ஆண்டனி, வசனம் – சக்தி ராஜசேகரன், சதீஷ் செளந்தர், தயாரிப்பு வடிவமைப்பு – கமலக்குமார், எஸ்.சுகந்தன், ஸ்டில்ஸ் – ஜோன்ஸ், டிஸைன்ஸ் – ஜெ.ஷரத், கிராபிக்ஸ் – மாஸ்டர் மீடியா, டாஸ்பி அட்மாஸ் – மந்த்ரா ஆடியோ லேப், மக்கள் தொடர்பு – நிகில்.

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படும் அவஸ்தைகள், தனியார் கல்வி நிர்வாகங்கள் செய்யும் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இத்திரைப்படம்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. இவரின் ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேற்படிப்பிற்காக சென்னைக்கு குடி பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும், அதனால் உருவாகும் பிரச்சனைகளும்… கிருஷ்ணா சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அதை எதிர்கொள்ள கிருஷ்ணா எடுக்கும் முடிவுகளுமே இந்த ‘எய்தவன்’ படத்தின் கதை.

இந்தத் திரைப்படம் வரும் மே 5-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

Share this:

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles