.
.

.

Latest Update

திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம்..


திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம்……

மதுரை, ஜூன்.1-

திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வெண்டும் சினிமா வினியோகஸ்தர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர்கள் சம்பளம்

மதுரை-ராமநாதபுரம் யுனைடெட் சினிமா வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார். செயளார் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார் வரவேற்று பேசினர். கூடத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் தமிழ் திரைப்படங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் வசூல் வினியோகஸ்தர்கள் லாபமாக இல்லை. அவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே திறையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் ஆகியோர் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். நமது ஏரியாவில் திறையரங்குகளில் நுழைவு கட்டணம் குறைவாக உள்ளது. கட்டணம் உயர்வு தொடர்பாக ஏற்கனவே கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலைக்டரிடம் கேட்டு கொள்ளப்படுகிறது.

பகிர்ந்து அளிக்க வேண்டும்

ரூ.5௦ லட்சத்திற்கு மேல் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவிதத்தை, படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெளிவந்து வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் அந்த 25 சதவிதம் வழங்க வேண்டும். படம் தோல்வி அடைந்து நஷ்டம் ஏற்பட்டால் சம்பள பணத்தை வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு சதவீத அடிப்படையில் அந்த பணத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் இணை செயலாளர் தாமஸ் நன்றி கூறினார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles