.
.

.

Latest Update

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி


தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கணவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வியாழக்கிழமை தேநிர் விருந்தளித்தார். இந்திய நடிகர்கள்

The President, Shri Pranab Mukherjee in a group photograph with the Brand Ambassadors of the Swachh Bharat Mission, at Rashtrapati Bhavan, in New Delhi on September 10, 2015.

The President, Shri Pranab Mukherjee in a group photograph with the Brand Ambassadors of the Swachh Bharat Mission, at Rashtrapati Bhavan, in New Delhi on September 10, 2015.

கமல்ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், இந்திய தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்திற்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருடன் நடைபெற்ற இந்த உரையாடலின் போது, சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்தார்கள். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஆலோசனைகளையும் ஏற்று, இதற்கான பணிகளை செம்மைப்படுத்த உறுதி மொழியும் அப்போது எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதியை பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார். அத்துறை இணை அமைச்சர் பாபுலால் சுப்ரியோ திட்டத்தின் சிறப்புகள் குறித்து தூதர்களிடம் விளக்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சௌரவ் கங்குலி, முகம்மது கைஃப், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் அரூண் பூரி, ராமோஜி ராவ், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, எழுத்தாளர் சேத்தன் பகத், வடகிழக்கு தில்லி தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இத்திட்டத்திற்கான தூதர்கள் தங்களின் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி, தூய்மை இந்தியாவை பிரபலப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles