.
.

.

Latest Update

‘நகர்வலம்’ படப்பிடிப்பு தளம்


ரெட்கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என்.ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதைநாயகனாக ‘காதல்சொல்லவந்தேன்’ பாலாஜி, புதுமுகநாயகி
தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவிஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர்பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் படபிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நடந்து வருகிறது.

படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி ,” சென்னைநகரில் குடிநீர்விநியோகிக்கும் மெட்ரோவாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல ஏரியாகளுக்கு குடிநீர்விட செல்லுகையில் , ஓர் ஏரியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருபெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால்ஏற்படும் பிரச்சனைகளும் தான்கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது ” என்றார் .

மேலும், இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு, ‘கானாபுகழ்’ இசையமைப்பாளர் தேவாஅவர்கள் பாடியுள்ளார்.

தொழிற்நுட்பகலைஞர்களாக:
ஒளிப்பதிவு:தமிழ்தென்றல்,
இசை :பவன் ,
படத்தொகுப்பு:மணிகண்டபாலாஜி ,
கலை:தேவா,
சண்டைபயிற்சி: ‘ஃபயர்’ கார்த்திக் ,
நடனம்:கல்யாண் ,நந்தா,விமல்ராஜ்,
பாடல்கள்:மோகன் ராஜன்.
சென்னைநகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணாநகர், சைதாபேட்டை, கே.கே.நகர், கண்ணகிநகர் ஹௌசிங்க்போர்டு ஏரியா போன்ற இடங்களில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles