.
.

.

Latest Update

நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.


VIJAY SETHUPATHI LAUNCHES INDEPENDENT ALBUM ’12 AM’ PRODUCED BY ‘RAP’ RAKESH

விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் |

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார். இசை தன் ராஜ்ஜிய எல்லைகளை .பல்வேறு வகைகளில் விரித்துக் கொண்டே செல்கிறது. அதில் உலகளாவிய ஒரு வடிவமே ‘ராப்’ என்பது. தமிழில் ராப் இசை குறைவாகவே உணரப்படுகிறது இக்குறையைப் போக்கும் வகையில் செயல்படுபவர்களில் ஒருவர்தான் ‘ராப்’ ராகேஷ்.பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரியான இவர் தமிழில் ராப் முயற்சியை முன்னெடுக்க முனைந்து வருகிறார். ராப் இசையை வெறும் கொண்டாட்ட இசையாகவோ கேளிக்கை வடிவாகவோ வெளிப்படுத்த விரும்பாத ராகேஷ், ராப்’ இசையை வெறும் பொழுதுபோக்கு நோக்கில் பயன்படுத்த விரும்பாமல் பழுது நீக்கும் நோக்கில் பயன்படுத்த விரும்புகிறார். எனவே அதில் சமூக நோக்கு கொண்ட பாடலாக தருகிறார். தன் முதல் ஆல்பமான ‘முன்னே வாடா . என்கிற வீடியோ ஆல்பத்தின் மூலம் ஊனமுற்ற இயலாத மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பாடி ஊக்கம் கொடுத்தார். அந்த வீடியோ ஆல்பத்தின் நேர்மையான நோக்கத்தை உணர்ந்து டிரம்ஸ் சிவமணி வெளியிட்டுப் பாராட்டி ஊக்கம் தந்திருக்கிறார்.. ராகேஷ் தனது அடுத்த வீடியோ ஆல்ப முயற்சியாக 12 AM என்கிற புதிய படைப்பைக் கொண்டு வந்திருக்கிறார். இதன் உட்பொருள் பெண்மை மதிக்கப்பட வேண்டும் பெண் களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதன் காட்சிகளையும் கருத்தையும் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி பிடித்துப் போய் இவ்வால்பத்தை தானே வெளியிட்டுப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். தமிழில் இண்டிபெண்டண்ட் ஆல்பம் இப்போது சமூக ஊடகங்களால் வரவேற்கப் படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ராப் ராகேஷ். இதில் ராகேஷ் பாடல் வரிகளை எழுதி பாடி நடித்து தயாரித்தும் இருக்கிறார். இந்த ஆல்பம் டில்லி நிர்பயா.கேரள ஜஸ் வா,் சென்னை மகேஸ்வரி, சுவாதி போன்ற வன் கொடுமைக்கு ஆளான இந்தியப் பெண்களுக்குச் சமர்ப்பணம் என்கிறார் ராகேஷ்.

VIJAY SETHUPATHI LAUNCHES INDEPENDENT ALBUM ’12 AM’ PRODUCED BY ‘RAP’ RAKESH

AN INDEPENDENT ALBUM BASED ON WOMEN EMPOWERMENT

Music has been expanding its realms upon its course of fascination through diversified genres and ‘RAP’ is definitely one among them, which has instantly caught up the fans and listeners in immense fever. Realizing the prominence of this genre, young and aspiring ‘Rap’ Rakesh who has pursued gradation in B.Tech Engineering has spearheaded with a new dimension. While ‘Rap’ is often considered as the craziest mode to offer enthrallments on the party floors, Rakesh wanted to make a different by adding social awareness and inspirational quotients to this ‘Rap’. Such is the illustration that we get through his independent album ‘Munne Vaada’. The song centers on the physically challenged people, who are motivated through the verses and compositions. Drums Sivamani has rendered his heartiest congrats on appreciating the great value of this song.

Rakesh is now gearing up with his next album ’12 AM’ that speaks about the women empowerment and the respect they deserve. After seeing few visuals from the songs, Vijay Sethupathi was so much impressed with the colossal work of Rakesh and decided to launch the album as well.

With the Independent albums earning decent receptions in the recent times, Rakesh has penned lyrics, composed music and has acted in the video album as well. The song is dedicated to the victims of gruesome death– Nirbhaya in Delhi, Jaswa in Kerala, Mahesh and Swathi in Chennai, who have lost their lives mercilessly.

YouTube Link : https://www.youtube.com/watch?v=MolhmU4K-LE

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles