.
.

.

Latest Update

நாளை முதல் ‘பல்பு சாங்’ ஆல்பம்


Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் வீடியோ ஆல்பம் ‘Bulbu Song’. பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், ‘வாகை சூடவா’ இனியா ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கு மஸ்தான்-காதர் இசையமைத்துள்ளார். ‘எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ’ என்ற ‘பல்பு சாங்’ ஆல்பத்தின் பாடல் நாளை(ஜூலை 25) சன் மியுசிக் சேனலில் வெளியாகவுள்ளது.

bulbu song Stills (2)அபிஷேக் – பிரசாந்த் பாடியுள்ள இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் B. சிவராக் சங்கர். ஹரிRJ ராஜன் – கார்த்திக் முனியாண்டி ஒளிப்பதிவில் , அரவிந்த் படத்தொகுப்பில் . ‘பல்பு சாங்’ என்ற ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் AR பரத் குமார்.

bulbu song Stills (1)“பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிடும் வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனத்துடனும் மற்றும் சன் மியுசிக் சேனலுடனும் இணைந்து ‘பல்பு சாங்’ பாடலை வெளியிடுவது எங்களுக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. ஒரு பெண்ணால் ‘பல்பு வாங்கிய’(ஏமாந்த) ஒரு இளைஞன், அவனை ஏமாற்றிய பெண்ணை திட்டி,கேலிசெய்து பாடும் பாடலே ‘எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ’. கண்கவர் காட்சிகள், துள்ளல் இசையென ‘பல்பு சாங்’ ஆல்பம் பெரும் வெற்றிபெரும். இந்த ஆல்பம் இதைப் போன்றப் பாடல்கள் மேலும் வெளி வர உதவும் என நம்புகிறோம். “ என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆல்பத்தின் தயாரிப்பாளர் DR.S. செல்வமுத்து.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles