.
.

.

Latest Update

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”


ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் நேற்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இயக்குனர் அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் “இதயம் முரளி” என்னும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

விரைவில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்க, முதல் கட்ட வேலையாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படபிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் இயக்குனர் அஹமது.

படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தபின் சில தினங்களில் படக்குழுவினருடன் இந்தியா திரும்புகிறார் இயக்குனர்.

அனிருத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles