.
.

.

Latest Update

‘பாகுபலி’ படத்திற்காக GLOBAL UNITED MEDIA கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.


நடிகர் ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ திரைப்படத்தை GLOBAL UNITED MEDIA நிறுவனம் சென்ற மாதம் தமிழகத்தில் முழு உரிமையையும் வாங்கி வெளியிட்டது. அந்தப் படம் எதிர்பார்த்ததையும் மீறி பெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்தது.

GLOBAL UNITED MEDIA நிறுவனம் ‘ஐ’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி கேரளாவில் வெளியிட்டது. ‘ஐ’ திரைப்படத்தின் பப்ளிசிட்டி கேரளாவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. வசூலையும் வாரிக்குவித்தது.

இந்திய அளவில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படத்தின் உரிமையை GLOBAL UNITED MEDIA கேரளாவுக்கு வாங்கியது. வசூல் ரீதியாக இந்திய சினிமாவை மிரட்டிய ‘பாகுபலி’ படத்திற்காக கேரளாவில் GLOBAL UNITED MEDIA நிறுவனம் கொச்சியில் 51598.21 SQ.FT அடி அளவில் போஸ்டர் வைத்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் உயரமான போஸ்டர் துருக்கி நாட்டில் 50687.25 SQ.FT வைக்கப்பட்டதுதான். இந்த சாதனையை GLOBAL UNITED MEDIA தகர்த்து புது சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து GLOBAL UNITED MEDIA நிறுவனர் ப்ரேம்குமார் மேனன் கூறியதாவது,

‘’பாகுபலி’ படம் ரிலீஸ் செய்த எல்லா தியேட்டர்களிலும் HOUSEFULL-ஆக ஓடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஜூன் மாதத்தில் ‘பாகுபலி’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக பட விளம்பரத்தை புதுமையாக செய்ய விரும்பியும், மக்களை வெகுவாக கவரும்படியும் கொச்சியில் ‘பாகுபலி’ படத்திற்கு நாங்கள் வைத்த (51598.21 SQ.FT அளவில்) பிரம்மாண்டமான பேனருக்குத்தான் உலக கின்னஸ் சாதனை கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் படத்தின் பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி சார் மற்றும் பிரசாத் AND ஷோபு ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியாக கூறினார்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles