.
.

.

Latest Update

பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் “ அபூர்வமகான் “ வெளியீடு


ApurvaMagan Movie Stills (10)டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “ இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள்.மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி நடிக்கிறார்.
எடிட்டிங் – சுரேஷ்அர்ஷ்
இசை – V.தஷி
ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்
ஒளிப்பதிவு – G.சீனிவாசன்
கலை – S.S.சுசி தேவராஜ்
நடனம் – பவர் சிவா, மாமு சரவணன்
பாடல்கள் – அண்ணாமலை, தமிழமுதன், சினேகன். ஏம்பல் ராஜா, வேலாயுதம்.
தயாரிப்பு மேற்பார்வை – ராம்பிரபு / இணை தயாரிப்பு – K.P.செல்வம்
தயாரிப்பு – T.N.S.செல்லத்துரை தேவர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கே.ஆர்.மணிமுத்து.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து விட்டது. மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்த பாபா அவகளின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.இந்த படத்தை வெளியிட முடிவிசெய்த போது. படத்தை பார்த்த எம்.ஆர்.கிரியேசன்ஸ் A.ஜோதி முருகன் அவர்கள் படத்தை வாங்கி நான் ரிலீஸ் செய்கிறேன். பாபா படத்தை ரிலீஸ் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.ரிலீஸ் வேலைகளை தொடங்கி இமாதம் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம் . அப்போது நண்பர் ஒருவர் நீங்கள் ரிலீஸ் செய்யும் தேதி தான் பாபா ஜீவ சமாதி அடைந்த நாள் என்று கூறினார். அவர் சொல்லிய பிறகுதான் எங்களுக்கே தெரியும் இவை அணைத்து தானாகவே நடந்தது. பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் படத்தை வெளியிடுவது பாபா மீண்டும் உயிருடன் வருவது போல் எங்கள் படக்குழுவினருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles