.
.

.

Latest Update

“பார்த்திபன் கற்பனைக்கு இசை அமைத்தது, சற்று சவாலாக இருந்தது… இசையமைப்பாளர் சி சத்யா ..


“பார்த்திபன் சாரின் கற்பனைக்கு இசை அமைத்தது, சற்று சவாலாக இருந்தது…” என்கிறார் கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பி இருக்கும் இசையமைப்பாளர் சி சத்யா

ஒரு திரைப்படத்தின் காட்சிகளையும், கதையையும் ரசிகர்களின் மனதில் விதைக்கும் வலிமை, அந்த படத்தின் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது….சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘வள்ளி’ படத்தில் வரும் கிட்டார் பின்னணி இசையே அதற்கு சிறந்த உதாரணம். தற்போது அந்த வரிசையில் இணைய, ‘மெலோடிக்கா’ என்னும் ஜெர்மன் இசை கருவியோடு, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்தில் களம் இறங்கி இருக்கிறார், இசையமைப்பாளர் சி சத்யா.

‘ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி’ மற்றும் ‘பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ் – பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திக்கின்றனர்…..வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி விமர்சையாக நடைபெற இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை, விரைவில் தன்னுடைய 65 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும், தன்னுடைய குருநாதர், இயக்குநர் சிகரம் கே பாக்கியராஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார், இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

“பொதுவாகவே பார்த்திபன் சாரின் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு இசையமைப்பது என்பது சற்று கடினமான காரியம்……அந்த வகையில், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு இசையமைத்தது எனக்கு சவாலாகாவே இருந்தது….’மெலோடிக்கா’ எனப்படும் இசை கருவியை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை களம் நகரும்….எனவே பெரும்பாலான காட்சிகளுக்கு அந்த குறிப்பிட்ட கருவியின் இசையை தான் நாங்கள் பின்னணி இசைக்காக பயன்படுத்தி உள்ளோம். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். நிச்சயமாக பார்த்திபன் சார் வரைந்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்ப என்னுடைய இசை பக்கபலமாக இருக்கும் என நம்புகிறேன்….” என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் சி சத்யா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles