தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.