.
.

.

Latest Update

புதுமுகங்கள் நடிக்கும் “ இஞ்சி முறப்பா “


புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
யுகபாரதி பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – ஹரி
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா / ஸ்டன்ட் – நந்து
தயாரிப்பு நிர்வாகம் – வாசு / நிர்வாக தயாரிப்பு – ராஜு
தயாரிப்பு – மலர்கொடி முருகன், A.P.ராதாகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி அவரிடம் கேட்டோம்…..
தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது !
தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை !
பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குனர்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி மற்றும் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )