.
.

.

Latest Update

புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் நடிக்கும் “கட்டம்” திரைப்படம்


இந்த 2017-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தில் இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘துருவங்கள் 16’, ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ரங்கூன்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘மரகத நாணயம்’ என தொடர்ந்து புதிய இயக்குநர்களின் படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணையவுள்ளது ‘கட்டம்’ திரைப்படம். இந்தப் படத்தை I create wonder என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ளது.

புதுமுகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நாயகியாக ஷிவதா நாயர் நடித்துள்ளார்.

நவீன் – ஜே.சி.பால் என்ற இரட்டையர்கள் இசை அமைக்க, டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத் தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில், சந்தியா ஜனா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

‘முரண்’ திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராஜன் மாதவ், “கிரைம் த்ரில்லர் கதைகள் தமிழ் திரை உலகுக்கு புதியது அல்ல. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் ‘கர்மிக் திரில்லர்’ யுக்தி மிகவும் புதிது. ‘வினை விதைத்துவன் வினை அறுப்பான்’ என்பது பழமொழி, ‘அதற்கு துணை நின்றவனும் வினை அறுப்பான்’ என்பதே இந்த ‘கட்டம்’ படத்தின் மையக் கருத்து.

ரசிகர்களுக்கு நாங்கள் படத்தை கையாண்டு இருக்கும்விதம் நிச்சயம் பிடிக்கும் என்றே நம்புகிறோம். இப்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்ட போஸ்ட் productions பணிகள் நடைபெற்று வருகின்றன…” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles