.
.

.

Latest Update

மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மோற்சவம்


mahesh-babu_640x480_81437129346பிவிபி சினிமா தயாரிக்க மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மோற்சவம் படப்பிடிப்பு இன்று துவங்கியது
பிரின்ஸ் மகேஷ் பாபுவின் முந்தைய படங்களின் மிக பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு , ஒரு மங்களகரமான தேதியில் திருப்பதியில் ஆரம்பமான படம் தான் பிரம்மோற்சவம்.
இன்று துவங்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரின்ஸ் மகேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

பிரம்மோற்சவம் குடும்பங்களின் முக்கியதத்துவம் ,கலாச்சாரம் , உறவுகளின் அழகு ஆகிவற்றை நெஞ்சார கொண்டாடும் படமாக இருக்கும். பல சாதனைகளை புரிந்திருக்கும் , பிரின்ஸ் மகேஷ் பாபு அவர்கள் மிகவும் யதார்த்தமான மற்றும் சக்தி வாய்ந்த மனநிலையோடு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பி.வி.பி தயாரித்து வரும் இந்த படத்தை ஸ்ரீகாந்த் அதலா இயக்கி வருகிறார் .மிக பிரம்மாண்டமான இந்த படத்தில் சமந்தா , காஜல் அகர்வால், ப்ரனிதா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க இவர்களுடன்
சத்ய ராஜ் , ரேவதி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள் .மைக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்கிறார் தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles