.
.

.

Latest Update

மாகாபாரதத்தை 2:15 மணி நேரத்தில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல – நடிகர் கார்த்தி !!


Actor Sivakumar Narrates Mahbharatha Stills (17)நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் உறை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய உரையை கேட்க்க அவருடைய குடும்பத்தினரான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் அவர்களின் தாயார் , நடிகை ஜோதிகா , நடிகர் கார்த்தியின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய நடிகரும், நடிகர் suriyaசிவகுமார அவர்களின் மூத்த புதல்வரும்மான நடிகர் சூர்யா அவர்கள் தனது உரையில், வெள்ளாளர் மகளிர் கல்லூரி குடும்பத்தினர், ஆசிரியர், பேராசிரியர், காவல் துறை, அப்பாவின் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு முதற்க்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, இந்த நாள் உங்களுக்கு எப்படியோ அப்படியே எங்களுக்கும் சிறந்த நாள், என் அப்பாவின் இரண்டரை வருட உழைப்பு இது, இதற்காக ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஒதுக்கி இருக்கிறார். நாங்கள் ராமயணம் உரை நிகழ்த்தும் போது வருவதாக இருந்தோம் ஆனால் எங்களால் அதற்க்கு எந்த வித தடங்கல்கள் இருக்க கூடாது என்று ஒதுங்கி விட்டோம். ஆனால் இந்த முறை நாங்களே விரும்பி வந்திருக்கிறோம். கனவை நிகழ்த்த நேரமோ, காலமோ தேவையில்லை என்பதற்க்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்று அப்பாவின் கனவு மெய்ப்பட இருக்கிறது.அதே போல் நாளை உங்கள் கனவும் வெற்றி பெறும் அதனால் அனைவரும் அமைதியுடன் உரையை கேட்போம் karthiஎன்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா. அவரை தொடர்ந்து உரையாற்றிய நடிகர் சிவகுமார் அவர்களின் இரண்டாவது புதல்வரான நடிகர் கார்த்தி , ஈரோடு மிகவும் சிறந்த ஊர் , எல்லாரும் என்னை எங்க ஊர் மாப்பிள்ளை, எங்க ஊர் மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. அதே போல இந்த கல்லூரியும் சிறப்பு வாய்ந்த ஒரு இடம் தான் , ஏன் என்றால் இரண்டாவது முறையாக அப்பா அவர்கள் இந்த கல்லூரியில் உரை நிகழ்த்துகிறார். கல்லூரியில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல அதற்க்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார். அனைத்து மகாபாரத புத்தக பிரதிகளை வாசித்து மற்றும் நண்பர்களுடம் கலந்து உரையாற்றி மற்றும் சோப்ரா அவர்களின் மகாபாரதத்தை பார்த்துதற்ப்போது உறை நிகழ்த்த வந்திருக்கிறார். அதனால் கடைசி முறை ரமாயணம் பற்றிய உரையை நீங்கள் அனைவரும் அமைதியாக கவனித்தீர்களே அதே போல் இந்த முறையும் அமைதியாக இருக்க வேண்டும் இதில் இருந்து கற்றுக் கொள்ள jothikaவேண்டியது அதிகம் உள்ளது அதனால் தான் நாங்களும் அதை கேட்க இங்கே வந்துள்ளோம் என்று கூறி நன்றிகளுடன் தனது உரையை முடிக்க, அதை தொடர்ந்து நடிகர் சிவகுமாரின் அவர்களின் மூத்த மருமகள் திருமதி ஜோதிகா அவர்கள் பேசினார் , நான் இந்த குடும்பத்தில் திருமணம் ஆனது எனக்கு பெருமைக்கூறிய ஒன்று, எனது மகன் தேவ் இப்போது அப்பாவை (சிவகுமார்) போலவே அறிவாற்றலுடன் இருக்கிறான் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் அப்பாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த உரையை அவர் சிறப்பாக நிகழ்த்துவதற்க்கு.நான் இங்கு எங்கள் குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது அதற்க்கு அப்பாவிற்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles