.
.

.

Latest Update

மூன்றவது முறையாக இணையும் சிவகார்த்திகேயன் பொன்ராம் படத்தின் பூஜை இன்று துவங்கியது …


‘இளம் சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் நடிகை சிம்ரனும் ஒரு முக்கிய வேடத்தி்ல் நடிக்கவிருக்கிறார்.

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இயக்குநர் பொன்ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படத்திற்கு பின்பு பொன்ராம் இயக்கும் மூன்றாவது படம் இது. இந்த மூன்றிலுமே சிவகார்த்திகேயன்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் 2018, ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியாகும் என்று இப்போதே அறிவித்துவிட்டார்கள்..!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles