.
.

.

Latest Update

ரசிகர்களை யூகிக்க வைக்க வரும் “யூகன்”


IMG_9462
என்ன தான் சினிமா இன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் புதுமையா பன்றோம்னு சொல்லி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் இந்த விஷயத்தில் யூகன் படக்குழுவினர் நிஜமாகவே ஒரு புதுமையை கையாண்டிருக்கிறார்கள்.

ஆமாங்க, இப்போ ஒரு படத்தை உருவாக்க கிராஃபிக்ஸ் இல்லாம ஒரு இன்ச் கூட நகராது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலையில் கொட்டும் விதமாக இந்த படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிக்கும் ரெட் லைட் போட்டு நிறுத்தி வைத்துவிட்டார் இயக்குநர் ஜி.கமல்குமார்.

ஐடி துறையில் பணியாற்றும் ஐந்து பேரின் வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை மையமாக வைத்து ஒரு திகில் கலந்த பல திருப்பங்களை கொண்டதாக படத்தை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர். படத்தை திரையில் பார்க்கும் ரசிகர்கள் இந்த காட்சி கண்டிப்பாக கிராஃபிக்ஸ் தான் என்று நம்பும் அளவுக்கு கேமராவிலேயே பல யுக்திகளை கையாண்டுள்ளோம் என்கிறார் கமல்குமார்.

யாஷ்மித், சித்து, ஷியாம், சாக்‌ஷி, ஆயிஷா, தருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க ஜி கமல்குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles