.
.

.

Latest Update

ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் “ மகதீரா “


Magadheera Movie Stills (23)A V V S நாயுடு வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் பத்ரகாளி பிரசாத் தயாரிக்கும் படம் “ மகதீரா “தெலுங்கில் ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்து அமோக வெற்றி பெற்ற “ எவடு “ என்ற படமே தமிழில் “மகதீரா “ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் சாய்குமார், கிருஷ்ணமோகன், ஜெயசுதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – C.ராம்பிரசாத் / இசை – தேவிஸ்ரீ பிரசாத் ,பாடல்கள் – விவேகா, சினேகன், அருண்பாரதி, மீனாட்சி சுந்தரம், இயக்கம் – வம்சி பைடிப்பள்ளி, இணை தயாரிப்பு – வெங்கட்ராவ், தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத். இவர் வம்பு, பத்ரா, காயத்ரி ஐ.பி.எஸ். பாட்ஷா படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் உட்பட பல படங்களை தயாரித்தவர். வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் A.R.K.ராஜராஜா. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். அவரிடம் மகதீரா படம் பற்றி கேட்டோம்… அதிரடியான படம் இது. ஐந்து சண்டைகாட்சிகள் அதிரடியாக அமைக்கப்பட்டுள்ளது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது “ மகதீரா “ ராம்சரண் – காஜல் அகர்வால் பங்கேற்ற “ சூரிய புயலாய் எரிமலை அனலாய் தகி தகிக்கிறதே என் நெஞ்சம் ! என்ற பாடல் காட்சி விசாகப்பட்டினம், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது. படத்தின் கதை கருவே வித்தியாசமானது. ஒருவனுக்குள் இன்னொருவன் என்கிற வித்தியாசமான கதையை கொண்டது. படம் விரைவில் வெளியாக உள்ளது.” செல்வந்தன் “ வெற்றிக்கு பிறகு இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் படம் இது என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )