.
.

.

Latest Update

லஷ்மிமேனன் பாடிய “ஃபில்டர் ஃகாபி”


unnamed (2)நாகேஷ்வரராவ் தயாரிப்பில் ‘ஹோலி ஹவ் ட்ரீ’’ பட நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது ‘ஃபில்டர் காஃபி’’ திரைப்படம்.

“தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி தவிர்க்கமுடியாத ஒன்று. எல்லாவித விருந்துகளிலும், விருந்தோம்பல்களிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. அதைப்போலவே நான் இயக்கப்போகும் ஃபில்டர் காஃபி திரைப்படமும், தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம்பெறும்” என்றவரிடம் படத்தின் கதை பற்றி கேட்டபோது,
“ஒருவரை உபசரிப்பது, வரவேற்பது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் நிகழ்விற்கும்கூட காஃபி அவசியமாகிவிட்டது. அதுவும் ஃபில்டர் காஃபி என்றால், அதன் மகத்துவமே தனி. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை காஃபியோடு கொண்டாதுவதுபோல், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் வேறு ஒரு நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். அநது எம்மாதிரியான நிகழ்வு என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். அதுதான் திரைக்கதையின் பலம்.

“இந்தப் படத்தின் இயக்குநர் ராகவ்,அது மட்டும் அல்லாது ஒளிப்பதிவாளர் பனியும் இயக்குனரே மேற்கொண்டு இருக்கிறார் மற்றும்இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியன் மூவருமே 20 வயதுக்கு உட்பட்ட துறு துறு இளைஞர்கள் என்பதால், படம் இளமைத் துள்ளலோடு இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் நாகேஷ்வர ராவ்.

இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியனோடு பேசுகையில், “படத்தின் பாடல்களை ராகவ், ராஜ்குமார் மற்றும் ஷேஸா கோ மூவரும் எழுதியிருக்கின்றனர். முக்கியமாக, படத்தின் ப்ரமோ பாடலாக வரும் ‘ஓ காபி பெண்ணே’ பாடலை நடிகை லஷ்மி மேனன், தன் காந்தக் குரலால் பாடி அசத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கும். இதற்காக புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். ‘ஃபில்டர் காஃபி’ எனக்கு முதல் படம் என்றாலும், முத்தாய்ப்பான படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மட்டுமல்ல, இந்தப் படத்தின் நாயகர்கள் நரேன் பாலாஜி, தமீன் அன்சாரி, கார்த்திக் மற்றும் நாயகி சங்கீதா உட்பட பிரதான கதை மாந்தர்கள் அனைவரும் புது முகங்களே. முற்றிலும் புது முகங்களோடு, அறிமுக இளைஞர் பட்டாளமாக களமிறங்கும் ‘ஃபில்டர் காஃபி’ சூடு பறக்க தமிழ்ச் சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கும்போல் தெரிகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles