.
.

.

Latest Update

விஷால் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாயும்புலி’


விஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். இயக்குநர்கள் பாண்டிராஜும் திருவும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் விஷால்பேசும் போது ” இதன் ஆடியோ விழாவில் பாடல்கள் ஆகஸ்ட் 2ல் வெளியிட வுள்ளோம் செப்டம்பர் 4ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

இது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நினைக்கிறேன். இது நான் நடித்த போலீஸ் சம்பந்தப்பட்ட 3வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர் அந்தப் படத்தை அவரது பெஸ்டாக சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரிடம் சிறந்தது எல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாகவரவேண்டும் என்று நினைப்பேன் அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது .

பாண்டியநாடு எனக்கு பெரிய திருப்பு முனை. கிட்டத்தட்ட மறுபிரவேசம் போல உணரவைத்தது. இந்தப்படம் சுசீயின் சிறந்த படைப்பு. இமானின் சிறந்த படைப்பு என்றும் பேச வைக்கும்.

இன்றைக்கு ‘சிலுக்கு மரமே’ பாடல் வெளியாகி யுள்ளது. இதைவிட எனக்குப் பிடித்தது ‘யாரந்த முயல்குட்டி’ பாடல்.

வேந்தர் மூவிஸில் நடித்ததில் மகிழ்ச்சி.உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் எங்களை மாதிரிநடிகர்களுக்கு கண்டிப்பாகத் தேவை.இப்படி நடிக்கும் போது சில படங்கள் திசை மாறிப் போய்விடும். அதனால் வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம். இருந்தது. தயக்கம் இருந்தது, சந்தேகம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம்.. போகப் போக புரிதல் ஏற்பட்டது. நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இது காஜலுடன் எனக்கு முதல்படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி பழகினார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம்.

மனசுலபட்டதை செய்கிறேன் நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன்.

இதில் அனல் அரசு அமைத்த க்ளைமாக்ஸ் காட்சி பேசப்படும்.

‘பாயும்புலி’ பற்றி ப் பல விதமாகக் கேட்கிறார்கள். அந்த தலைப்பை கேட்ட போது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும்புலி தலைப்பு படத்துக்கு பெரியபலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது.

இது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும்.

இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல.உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் மதுரையில் நடந்துள்ளது.

செப்டம்பரில் பாயும்புலி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. வெளிநாடு போகத் திட்டமிட்டோம் இங்கேயே முடித்து விட்டோம் ஆனால் செலவு அதிகமாகி விட்டது. எல்லாம் நன்மைக்கே”.

இவ்வாறு விஷால் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது ”சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக்குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்:பேசும் போது ”சுசீந்திரன் நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு என்றார். இங்கேயே முடித்து எங்களை ஏமாற்றிவிட்டார். கம்போடியா போகாமல் காரைக்குடியிலேயே முடித்துவிட்டார். ” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது ”நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மனசுக்கு நெருக்கமான படம் இது .மதன் சார் இந்தப்படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.. ” என்றார்.

டி.இமான் பேசும் போது : ”இது எனக்கு ஸ்பெஷலான படம்.’ பாண்டியநாடு’, ‘ஜீவா’ வுக்குப் பிறகு சுசீயுடன் இணையும் 3 வதுபடம்.வேந்தர் மூவிசுக்கான முதல்படம். இதில் 5 பாடல்களை அருமையாக வைரமுத்துசார் எழுதியுள்ளார்.” என்றார்.

இயக்குநர் லிங்குசாமிபேசும் போது ”பாயும்புலியின் ஓசையே பாகுபலி என்று கேட்பது போல் தெரிகிறது.அதே போல வெற்றியும் தொடரட்டும்.விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில்
‘சண்டக்கோழி 2’உருவாகவுள்ளது. செப்டம்பர் 9ல் தொடங்குகிறது.” என்றார்.

ஜெயபிரகாஷ்பேசும் போது : விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக் கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் கஷ்டம் தெரியவில்லை” என்றார்.

தயாரிப்பாளர் மதன்பேசும் போது ” விஷாலுடன் நாங்கள் இணையும் 4 வது படம் இதுபடம் ஆரம்பித்த முதல்நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர்..” என்றார்.

விழாவில் கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ்,திரு, வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles