இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இனைந்து வரையும் ஓவியர்கள் போட்டி வருகிற 12/03/16 அன்று சனிக்கிழமை காலை 9.30மணி அளவில் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. விழாவின் தனி சிறப்பு யாதெனில் இசைஞானி இளையராஜா அவர்களின் simphony இசையான ” Nothing but wind ” எனப்படும் அவருடைய இசை கோரப்புகளை ஓவியர்கள் ஓவியங்களாக வரையுள்ளனர்.
விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் ,இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , வரைகலை கல்லூரி மாணவர்களான , இயக்குநர் கதிர் , இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.