24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம்.
அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு.
ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நடு இரவு” என்று பெயரிட்டுள்ளனர்.
ஒளிப்பதிவு – உலகநாதன்
இசை – S.ரமேஷ் கிருஷ்ணா
எடிட்டிங் – விஜய் ஆனந்த்
கலை – C.P.சாமி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா.
தயாரிப்பு – வி.எஸ்.மோகன்குமார்.
பேபி மோனிகா ஆவி வேடத்தில் நடிக்கிறார்.
கதாநாயகர்களாக கிரிஷ், சுதாகர், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் கே.பி.சங்கர், ரித்து, அகோரம் சிவா நடிக்கிறார்கள்.
இன்று (19 – 09 – 2014) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரிகர்சல் நடைபெறுகிறது.
படப்பிடிப்பு காட்டுப்பாக்கம் மாறன் கார்டனில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி, நாளை காலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் நடந்து முடிகிறது.