.
.

.

Latest Update

12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் “ நடு இரவு”


தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்

“ நடு இரவு”

ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் “ நடு இரவு “
அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இந்த நடு இரவுதான்.
கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா,ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
முக்கிய கதாப்பதிரத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – ராம்பிரகாஷ்
இசை – ஆர்.ரமேஷ்கிருஷ்ணா
எடிட்டிங் – விஜய்ஆனந்த்
கலை – சி.பி.சாமி
தயாரிப்பு – வி.எஸ்.மோகன்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா.
ஒரு கிராமத்திற்கு நண்பனின் திருமணத்திற்காக போகும் மூன்று ஜோடிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு பங்களாவில் ஒரு இரவு மட்டும் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவில் ஏற்கனவே உள்ள பேய் அவர்களை எப்படி கொடுமை படுத்துகிறது என்பதையும், அவர்கள் பேயிடம் இருந்து தப்பிதார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அறியலாம்.
ஒருநாள் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்த கஷ்டமானதாக இருந்தது எனினும் படப்பிடிப்பை பனிரெண்டு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டோம் என்றார் இயக்குனர் புதுகை மாரிசா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles