.
.

.

Latest Update

2014 பிலிம் பேர் விருதுக்கு போட்டி போடும் படங்கள்


pizap.com143339044492012014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கான போட்டியில் ‘காவியத்தலைவன்’, ‘மெட்ராஸ்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 4 படங்களே அதிகமான பிரிவுகளில் பிரதானமாக மோதுகின்றன.

‘காவியத்தலைவன்’ திரைப்படம் மிக அதிகமாக சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி என அனைத்துப் பிரிவுகளிலுமே போட்டியிடுகிறது.

‘மெட்ராஸ்’ திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடகர், பாடகி ஆகிய 9 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

‘கத்தி’ திரைப்படம், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, பாடகர், பாடகி, பாடலாசிரியர் ஆகிய 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர் ஆகிய 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ‘மான் கராத்தே’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 3 படங்களுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் இன்னும் சில படங்களும் உள்ளது பொருத்து இருந்தது பார்போம் யாருக்கு வெற்றின்னு சரி நம்ம சார்பா எல்லோருக்கும் வாழ்த்துகள்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles