2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கிறர் திரை துறையினர். தனது வசீகர இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அரண்மனை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது’ அரண்மனை திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்து உள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர் .சி சார் எனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்’ அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் ,வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.பொங்கல் அன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளேன்.நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும். டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு இணையாக நடித்து உள்ளேன்.இந்த படம் Hollywood படங்களுக்கு இணையான படமாக இருக்கும்.அடுத்து வெளிவரும் ‘உயிரே’படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன்.அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு ‘ எனக்கு மிக பொருத்தமான படமாகும் .மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய் சாருடன், சிம்பு தேவன் இயக்கதில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு.இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன்.படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன்.சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கிறர். கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும்.என்ன நடந்தாலும் , நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன் ‘ என தனக்கே உரிய மந்திர புன்னகையோடு விடைப் பெற்றார் ஹன்சிகா .