.
.

.

Latest Update

2016 -ல் வெளியாகும் படங்களின் அட்டவணை வெளியிட்ட ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’…


சர்வதேச அரங்கில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் திரைப் பட வர்த்தகத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்டு உள்ளது. உலகெங்கும் தங்களது திரைப் பட விநியோகம் மூலம் ரசிகர்களுக்கு இடை விடாமல் தரமான படங்களை வழங்கி வருகிறது. ஆங்கில படங்கள் மட்டுமின்றி , ஹிந்தி உட்பட மற்ற பிராந்திய மொழி படங்களையும் தயாரித்து வரும் இந்த நிறுவனம் , வருகின்ற 2016 ஆம் ஆண்டு தங்களது நிறுவனத்தில் இருந்து வெளி வர இருக்கும் படங்களின் அட்டவனையை வெளி இட்டு உள்ளது.

22 ஜனவரி 2016 தொடங்கி , டிசம்பர் 23 ,2016 வரையிலான் இந்த அட்டவணையில் பன்னிரண்டு படங்கள் உள்ளன. அதில் தமிழில் மொழி மாற்றம் செய்யப் படும் படங்கள் ஐந்து. Dead pool imax, குங் பூ பாந்தா3- 3டி,X-men;apocalypse 3டி Imax , இண்டேபெண்டேன்ஸ் டே, மற்றும் Ice age ஆகிய இந்தப் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாரின் நிர்வாக இயக்குனர் திரு விஜய் சிங் இதை பற்றிக் கூறுகையில் ‘ எங்களது நிறுவனத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டின் ஹாலி வூட் படங்களுக்கான அட்டவனையை வெளி இடுவதில் மிகுந்த பெருமை அடைகிறோம். இந்தப் படங்கள் எல்லாமே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளும் படங்கள் ஆகும்’ என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles