HERO CINEMAS 9டூ 10 (ஒன்பதிலிருந்து பத்து வரை) கதை முன்னோட்டம்
ஒரு காலைப் பொழுதில், மிக முக்கிய விஷயமாகHeroine (ஸ்வப்னா) காஞ்சிபுரம் வரை ஒருcall taxi -யில் செல்கிறாள்.call taxiயின்Driver-ரான Hero (கதிர்) ஒரு விநோதமான நடவடிக்கையுள்ளவனாக இருக்கிறான். இதனால் எரிச்சலும் பயமுமாக பயணத்தை தொடர்கிறாள்.
இதற்கிடையில், ஒரு இடியாப்ப சிக்கலில் போலிஸ் வேறு இவர்களை தேடிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பின் தொடர்ந்து துரத்துகிறது.இவர்கள் காஞ்சிபுரம் சென்றதும், Heroine, Hero- வுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறாள். ஆனால் அதை விட ஒரு பேரதிர்ச்சியை Heroine க்கு,Heroதிருப்பிக் கொடுக்கிறான்.
சென்னை திரும்பியதும், Heroவின் உயிருக்கு ஆபத்து வருகிறது இதன் தொடர்ச்சியாக Heroine-ம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.
இதன் காரணங்கள் அவிழ்க்கபடும்போது, ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச்மாதிரி சிக்ஸர்களாக பறக்கும்.
உச்ச கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், காதல் மீது Hero எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும் கவித்துவமும் கலந்திருக்கும்.
HERO CINEMAS
9 டூ 10
நடிகர்கள்
கதாநாயகன் : கதிர் (சென்ற ஆண்டு வெளியான
காந்தர்வன் படத்தில் ஹீரோவாக நடித்தவர்)
கதாநாயகி : ஸ்வப்னா ( ‘இதிகாசம்’ மலையாளப்
படத்தில் திரு. மோகன் லாலுடன் நடித்தவர்)
டெபுடி கமிஷ்னர் ரோல் : சரவண சுப்பையா (திரு. அஜித் நடித்த
சிட்டிசன் பட இயக்குனர்)
அஸிஸ்டண்ட்
கமிஷ்னர் ரோல் : ‘பாய்ஸ்’ ராஜன் (இயக்குனர் திரு.
ஷங்கரின் பாய்ஸ் பட்த்திலிருந்து தொடர்ச்சியாக முன்னணி கதா பாத்திரங்கள் செய்பவர்)
இன்ஸ்பெக்டர் ரோல் : முருகன் (இயக்குனர் திரு. வாசுவின்
இணை இயக்குனர். திரு. பார்த்திபனின்
கதை – திரைக்கதை வசனம் படத்தில் படத் தயாரிப்பாளராக நடித்து புகழ் பெற்றவர்)
ஏட்டு ரோல் : ‘அவன் இவன்’ராமராஜன்
(இயக்குனர் திரு.பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் போலீஸாக நடித்து புகழ் பெற்றவர்)
வீட்டு மாப்பிள்ளை : இயக்குனர் ஜகன் (கோடம்பாக்கம்,
ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குனர். ‘மாயாண்டி குடும்பத்தினர்’ படத்தில் ஒரு தம்பியாக நடித்து புகழ் பெற்றவர்.) இவர்களுடன்,
திரு லிவிங்ஸ்டன், திரு. கிரேன் மனோகர், புவன், தமிழ் செல்வி, சுஷ்மா ஆகியோரும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.