சோதனை முயற்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் பரத் ஜெயின், இந்த முறை தாம் நேரில் கண்ட காட்சிகள் வகையான, ரசிகர்களை பொழுதுபோக்கின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் படத்துடன் வருகிறார்.
6-5=2 என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் தென்னக ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் ரசிகர்களும் பார்த்து மகிழ ஏதுவாக ஹிந்தியில் எடுக்கப் பட்டிருக்கிறது.
முழு நீளத்திரைப்படம் போன்று காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தாலும், இளைஞர்களின் மலையேற்ற சாகசம் சந்திக்கும் திகில் அனுபவங்களைத் தாங்கள் நேரில் பார்த்து அனுபவிக்கும் மன நிலையுடன் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார் இயக்குனர். படம் பார்ப்பவர்களை சீட்டின் விளிம்பிற்குக் கொண்டு வரும் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும்..
பரத் ஜெயின் தயாரித்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த் குப்தா, அஷ்ரத் ஜெயின், கவுரவ் பசுவாலா, கவுரவ் கோதாரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஓபி நய்யாரின் பேத்தி நிஹாரியா ராய்ஜடா அறிமுகமாகிறார்.