‘கிரகணம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ ‘யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது மற்றும் ‘விழித்திரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. தேதிகள் இல்லாக் காரணத்தால் ஏப்ரல் 18 , 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் ‘யட்சன்’ மற்றும் விழித்திரு படங்களுக்கும் இரவு நேரங்களில் ‘ கிரகணம் ‘ படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு ஏப்ரல் 20ஆம் தேதி காலை வரையும் சென்றது.”
“ இது நிதமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. இப்படி ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனினும் அலைச்சலால் என் உடல்நிலைக் கெடாமல் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினர்க்கும் நன்றி.” என்றும் மிளிரும் பணிவுடன் கூறினார் கிருஷ்ணா.