.
.

.

Latest Update

Auraa சினிமாஸ் நிறுவனத்தினர் உப்புகருவாடு திரைப்படத்தை வாங்கினர்


Uppu Karuvadu Movie Stills (2)இயக்குனர் ராதாமோகனின் படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பு உண்டு.விரைவில் வெளி வர உள்ள ‘உப்பு கருவாடு’திரைப் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதை ஊர்ஜிதப் படுத்தி உள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடித்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் தரமான படங்களை வாங்கி வெளியிடுவோர் என்ற பெயரை குறிய காலத்தில் பெற்று உள்ள Auraa சினிமாஸ் சினிமாஸ் உப்புகருவாடு படத்தை வாங்கி வெளியுடுகிறனர்.

Auraa சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் இதைப்பற்றி கூறுகையில் ‘எங்களது நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது தான். அந்த வகையில் உப்புகருவாடு எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். எனக்கு இயக்குனர் ராதாமோகன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்பொழுது அவர் இயக்கிய உப்புகருவாடு படத்தை வாங்கி வெளியிடுவதை பெருமையாக கருதிகிறேன். எல்லா தரப்பு ரசிகர்களும் குடும்பத்தோடு சென்று பார்க்க கூடிய இந்த ஜனரஞ்சகமான படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 11 அக்டோபர் நடக்கவுள்ளது. படம் வெளி வரும் நாளைக் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளோம்”என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles