வெண்ணிலா வீடு, ஐவராட்டம், CSK போன்ற வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்த திரு வெங்கடேஷ் ராஜாவின் “தி வைப்ரண் மூவிஸ்” நிறுவனம் தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய B.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் “பேபி” என்னும் புதிய படத்தை உலகெங்கும் வினியோகம் செய்யவுள்ளனர்.
இப்படத்தின் Digital Motion Poster வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சரியாக மாலை 6 மணி 6 நிமிடத்திற்கு சமந்தா தனது டிவிட்டரில் வெளியிடுகிறார்.
6ம் தேதி, 6 மணி, 6 நிமடம், இதற்கு மேலும் இப்படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டுமா என்ன???