.
.

.

Latest Update

‘Lone Wolf Production’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் ‘சவரக்கத்தி’.


இயக்குனர் மிஷ்கினின் ‘Lone Wolf Production’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் ‘சவரக்கத்தி’. மிஷ்கினின் உதவி இயக்குனரான GR ஆதித்யா இயக்கும் இப்படம் இன்று தொடங்கப்பட்டது. மிஷ்கின்கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று பரிணாமங்களை ஏற்றுள்ளார்.

_MG_3048இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறியதாவது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம்” என்றார்.

இயக்குனர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தான் முன் ஏற்றிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் மிஷ்கின் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

‘சவரக்கத்தி’ படத்திற்கு PC ஸ்ரீராம் அவர்களின் உதவியாளர் V.I. கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், ‘பிசாசு’ புகழ் அரோல் குரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார், கோபிநாத் படத்தொகுப்பு செய்ய, N சதீஸ் குமார் கலையமைப்பில், தினேஷ் காசி சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles