இசைக்கு இசைவது இளமையின் இயல்பு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் நடிப்பு, பாட்டு, வாத்தியம் என நடிப்பிலும் இசையிலும் கைதேர்ந்த இளமை பட்டாளம் நடித்துள்ளனர். இப்படத்தில் ட்ரம்ஸ் கலைஞர் நடித்திருக்கும் ஜோஸ் செல்வராஜ் தனது இசை பயணத்தையும், நடிப்புக்கான ஆர்வத்தையும் கூறுகிறார்.
“ கொடைகானல் சர்வதேச பள்ளியில் இசை பயின்றேன். சிறு வயது முதலே ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பிதேன். பின், லண்டன் ராயல் ஸ்கூல் ஆஃப் மியுசிக் Grade 5 முடித்துள்ளேன். இந்திய இசைக்கருவி தபலா வாசிக்கவும் கற்றுகொண்டேன். இக்கதையில் பையாஸ் என்ற கல்லூரி மாணவனாக வருகிறேன். என்னுடைய நிஜ குணாதிசியங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எனக்கு மிக எளிமையாய் இருந்தது. முதலில், ஜேம்ஸ் சார் என்னை நடிக்க சொன்னபொழுது தயங்கினேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் நடிக்க சொல்லி கொடுப்பார். தற்பொழுது நடிப்பின்மேல் அதித ஆர்வம் வந்துள்ளது. கானா பாடலுக்கு வாசித்த அனுபமும் புதியதாய் இருந்தது” என்று கூறினார் ஜோஸ்.
“ பாட்டு , ஆட்டம், நடிப்பு மற்றும் இசை கருவி வாசித்தல் என முழு அனுபவமும் இனிதை அமைந்தது. இப்படத்திற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டி சென்று இருந்தோம். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு ஸ்டுடியோ உள்ளே செல்கிறேன். அங்கிருந்த ஷூட்டிங் ஸ்டுடியோக்களை கண்டு வியந்தே போனேன். இப்படி பல புதிய அனுபவங்களை எங்களுக்கு அளித்தது ‘வானவில் வாழ்க்கை’. முழுக்க முழுக்க இசையை மையமாக கொண்ட ‘மியுசிக்கல் ஃபிலிம்’ இது. பலரது கல்லூரி வாழ்கையை நினைவுக்கு கொண்டு வரும் இப்படம் ஜேம்ஸ் சாரின் கனவு. அக்கனவு நினைவேற நானும் ஒரு அங்கமாய் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது“ என வியப்புகள் நிறைந்த புன்னகையுடன் கூறுகிறார் ஜோஸ் செல்வராஜ்.