.
.

.

Latest Update

கோடை விடுமுறையை கலக்க வரும் காஞ்சனா-2


04டான்ஸ் மாஸ்டர் கம் இயக்குநர் ராகவா லாரன்ஸ்
இயக்கத்தில் ரிலீசான முனி, காஞ்சனா ஆகிய இரண்டும் தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துவிட்டது. இந்த வரிசையில் தற்போது காஞ்சனா 2 ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இன்று சென்சார் குழுவினர் காஞ்சனா 2 படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி படத்தை அடுத்த வாரமே ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

சுமார் 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடக்கூடிய காஞ்சனா 2 நிச்சயம் ரசிகர்களை மிரள வைக்கும் வசூலிலும் அள்ளி குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். லாரன்சுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles