“மாயா” வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ” மாநகரம்”.
வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ , சந்தீப் கிஷன் , சார்லி மற்றும் முனிஸ் கான் “ ராம தாஸ்” ஆகியோர் நடிக்கிறார்கள் . படத்தில் நடித்துள்ள நால்வருடைய காதாபத்திரமும் மிகவும் வித்யாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் முக்கிய புள்ளிகளான நால்வரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களுடைய வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நால்வரின் எதிர்பார்ப்பை த்ரில்லர் பாணியில் அமைத்துள்ளார்கள். நான்கு பேர் கதையிலும் ஓர் உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் இதோடு தொடர்புடைய ஹைபர் லிங்க் எனும் புதுமையான திரைக்கதை யுக்தியை படத்தில் கையாண்டுள்ளார்கள்.
படத்தில் நாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். படத்தில் அவருக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரம். படத்துக்கு ஒளிப்பதிவு செல்வகுமார் , இசை :- ஜாவித் , சண்டை – அன்பறிவு , தயாரிப்பு – போடன்ஷியல் ஸ்டுடியோஸ் .
படத்தின் 7௦ சதவித படபிடிப்பை சென்னையில் பரபரப்பான தெருக்களில் வைத்து தான் படம்பிடித்துள்ளார்கள் . Shooting over .