பொதுவா ஒரு இயக்குநருக்கு அவரின் படைப்பு சம்பந்தமான சிந்தனை வருவது சகஜம்தான் ஆனால் அந்த சிந்தனையே 24 மணி நேரமும் இருந்தால் அது அடுத்தவர்களை ஆச்சர்யபட வைக்குதோ இல்லையோ குடும்பத்தில் மனைவியை கண்டிப்பா கடுப்பேத்தும்…
தனது காதல் கணவர் இயக்குநர் விஜய் எப்போதுமே ஏதாவது கதையை சொல்லிக்கிட்டே இருப்பார்,ஒய்வு எடுக்க வெளிநாடு சென்றாலும் அங்கேயும் கதை சொல்லுவாரம் அது எனக்கு செம போர் அடிக்கும் என்று விஜய்யை கிண்டலடித்து பேசினார் அமலா பால். இது நடந்தது வேறு எங்குமில்லை “இது என்ன மாயம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான்.இந்த மாதிரி தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறாராம் நடிகை அமலா பால்.